வெள்ளி, 24 ஜூன், 2016

இந்து மதத்தில் ஏராளமான சாமிகள் ஏன் தெரியுமா?

இந்து மதத்தில் ஏராளமான சாமிகள் ஏன் தெரியுமா? ஒரு விஞ்ஞான காரணத்தால்தான். தன்னை சுயவசிய படுத்திக் கொள்ள தன்னைப் போன்ற குணங்கள் கொண்ட ஒரு சாமி ஒவ்வொருவருக்கும் தேவை. அதன் முன்னால் நின்று பேசுவது தனக்குத்தானே தெளிவுபடுத்திக் கொள்வதுதான். அது மிகவும் விஞ்ஞானபூர்வமானது. ‘ ஸெல்ப் – ஹிப்னாஸிஸ் ‘ என்ற இந்த சுயவசியம் ஆபத்தில்லாதது. உடனடிப் பலன் கொடுப்பது. நம்மை நாமே சுத்தப்படுத்திக் கொள்ளும் எளிய சக்தி மிகுந்த
வழி இது.
ஆகவே இதை அவர்களுக்கு புரிய வைப்பதே செய்ய வேண்டியது, அப்போது அதன்மூலமும் அவர்கள் உயரலாம்.
முதலில் கிடைத்துள்ள 
வாழ்க்கையை சந்தோஷமாக வாழு.
பணம் இருந்தால்
அருமையான இசையை 
கேட்டவாறு 
அழகான ரூமில் நடனமாடு.
ஏழை என்றால்
நிலவின் வெளிச்சத்தில்
இரவில் வண்டுகளின் ரீங்காரத்தில்
பறவை பாடல்களின் இடையே
திறந்த வெளியில் நடனமாடு.
ஆஹா! அன்பின் எல்லை
கண்டேன்,
அளவிலா ஆனந்தம் கொண்டேன்,
அதை…………..
உங்களுக்கு சொல்ல வந்தேன்,
இதோ அந்த அடையாளம்.
இலக்கிழந்த மனம்,
எரிமலையாய் குளிர் தீ உமிழும் இதயம்,
எப்போதும் மிதக்கும் உடல்,
வானமும் பற்றாத பொருள்
வரம்பிழந்த பரிமாணம்.
இப்போது புரிகிறதா?
புரிந்து பயனில்லை,
புறப்படுங்கள்……
……நேசக்கரம் நீட்டி!
முதலில் கிடைத்துள்ள 
வாழ்க்கையை சந்தோஷமாக வாழு.
பணம் இருந்தால்
அருமையான இசையை 
கேட்டவாறு 
அழகான ரூமில் நடனமாடு.
ஏழை என்றால்
நிலவின் வெளிச்சத்தில்
இரவில் வண்டுகளின் ரீங்காரத்தில்
பறவை பாடல்களின் இடையே
திறந்த வெளியில் நடனமாடு.
இறுக்கத்திற்க்கும் போராட்டத்திற்க்கும் 
காரணம் 
நமது சிறிய நானுணர்வுதான். 
அது போய்
 தன்னுணர்வு வரும்போது 
வாழ்க்கை ஒரு லீலையாய் விளையாட்டாய் மாறிப் போகிறது. 
எல்லாமே சமம்தான்
 பாதிபாதிதான் 
என்ற உணர்வு ஏற்படுகிறது.
 இயற்கையின் கூறாய் 
இருக்கும் வாழ்வை 
இதயம்
 திறந்து வாழ ஆரம்பிக்கிறோம் 
நமது விலங்குணர்ச்சிகள் 
பரிணாம வளர்ச்சியடைந்து 
அன்பாய், 
அழகாய், 
படைப்பாய்,
கவிதையாய்,
பகிர்தலாய்,
கருணையாய்,
மகிழ்ச்சியாய்,
நடனமாய்,
இசையாய்,
சிரிப்பாய்,
விஞ்ஞானமாய்,
இந்த
உலகத்தை 

சொர்க்கமாக்குகின்றன.
நண்பா !
நீ அன்போடு இரு….
ஆனால்
அது உன்னை வழுக்கிவிழ 
வைத்துவிடப் போகிறது,
அப்போது அது வெறும் பாசம்,
தன்னுணர்வான நிஜத்தை
மூடி விட்ட பாசம்.
பகிர்ந்து கொள்வதற்க்கு பதிலாக…………..
அன்பை
மனம் பேரம் பேசும் ஒரு வியாபாரம்.
மரமும்.........
இலையும்......
மலரும்........
மனமும்........
பகிர்வது ஒன்றேதான்.......!!!
நீயும் நானும் ஒன்றென்று.......!!!
நானின்றி நீயில்லை.........!!!
நீயின்றி நானில்லை.........!!!
நான் இல்லையேல்

 உன்னை ரசிப்பதற்கோ யாருமில்லை..........!!!
நீ இல்லையேல்

 பூமியில் எனக்கு வேலையில்லை........!!!
இங்கு நான் என்பது 

தனிப்பட்ட ஒரு உயிரை மட்டும் குறிக்கும் சொல்லல்ல.........!!!
ஒவ்வொரு நான்னிலும் இருப்பது

 பெருவெளியைத் தவிர வேறில்லை.........!!!
பிளவுகளும் இல்லை........!!!
பிரிவிவுகளும் இல்லை.......!!!
பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள 

அத்தனை தோற்றப் பொருட்களோடும் 
ஒன்றாகவே இணைந்துள்ளோம்........!!!